Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாட்களில்… தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது!

ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 10 நாள்களில் காவல் துறை 58, 440 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் 64, 733 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 48, 945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18,29 444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |