இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 ரயில் மோதி உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன மற்றும் காலநிலை மாற்றம் துறை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அசாமில் 62 யானைகளும், மேற்குவங்கத்தில் 57 யானைகளும், ஒடிசாவில் 27 யானைகளும், தமிழகத்தில் 5 யானையும் ரயில்கள் மோதி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் 213 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது.