Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களாக சுமார் 45 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை… சுகாதாரத்துறை

இதுவரை 23 மாநிலங்களை சேர்ந்த சுமார் 47 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

கடந்த 14 நாட்களாக 45 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரி, மஹே, மற்றும் கர்நாடகாவின் கோடாகு ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என இணை செயலாளர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு விகிதம் சுமார் 3.3% ஆகும்.

குறிப்பாக 45 வயதிற்கு கீழ் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதம் 14.4%, அதேபோல 10.3% இறப்புகள் 40-லிருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். கொரோனாவால் 60-லிருந்து 75 வயதிற்குள் இறந்தவர்களின் சதவிகிதம் 33.1% ஆகும். 42.2% உயிரிழப்புகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என சுகாதார இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இணை நோயுற்ற நிலைமைகளின் அடிப்படையில் ஒரு பகுப்பாய்வு செய்யப்பட்டால், 83% வழக்குகள் இணை நோயுற்ற தன்மையைக் கொண்டிருப்பதை காண முடிகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |