சீனாவை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முதன் முதலாக சீனாவின் உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இருப்பினும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மூலமாக சீன அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் டெல்டா உள்ளிட்ட மாற்றமடைந்த கொரோனா வைரஸ் சமீபகாலமாக மீண்டும் சீனாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனாவால் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 51 பேர் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,604 ஆக அதிகரித்துள்ளது.