கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அஃகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு 79ஆக உயர்ந்துள்ளது. 267 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் 306 பேருக்கும், தெலுங்கானாவில் 269 பேருக்கும், உ.பியில் 227 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அஃகிர்வால் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலில் நாடுமுழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியளித்துள்ளது என்று தெரிவித்த லாவ் அஃகிர்வால் 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் உறுதி படுத்தினார்.