கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 27,892ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 20,835 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 381 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த குணப்படுத்தப்பட்டவர்களில் எண்ணிக்கை 6,184 ஆகி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் குணமடைந்தவர்கள் விகிதம் 22.17%ஆக உள்ளது. முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் இருந்து புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. மகாராஷ்டிராவில் கோண்டியா, கர்நாடகாவில் தேவங்கேர் & பீகாரில் லக்கி சராய் உள்ளிட்டவை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட மூன்று புதிய மாவட்டங்கள் ஆகும்.
இதேபோல் கடந்த 14 நாட்களில் 85 மாவட்டங்களில் புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 47 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 504ஆக உள்ளது. பீகாரில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கையை 326 ஆக உள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.