Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற தல தோனி”… வைரலாகும் வசனங்கள்…!!

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விஜய் பேசிய வசனங்கள் தற்போது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் 10 மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு கடந்த மாதம் 13 ஆம் தேதி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் சுமார் 90% திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கொரோனா ஊரடங்கால் உறங்கிக்கொண்டிருந்த திரையரங்குகளை மக்கள் வெள்ளத்தால் தட்டி எழுப்பியது மாஸ்டர் திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்ற மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 250 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது வெளியான 16 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சமீபத்தில் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சி யூடியூப்பில் வெளியானது. திரைப்படத்தில் பேராசிரியராக நடித்துள்ள விஜய் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருப்பார். அப்போது ‘பிரஷர் ஆன சூழ்நிலையிலும் கூலாக முடிவெடுப்பதால் தான் தோனியை கேப்டன் கூல் என்று கூப்பிடுகிறோம்’ என விஜய் தெரிவித்து இருப்பார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விஜய் பேசிய இந்த வசனம் தற்போது வைரலாகி வருகிறது.

அதோடு’ இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்கள் ஆடை குறித்து விமர்சனம் செய்து கொண்டே இருப்பீர்கள்’ என்று பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு சாக்காக சொல்லப்படும் ஆடை விமர்சனம் குறித்து பேசி இருப்பதும் பாராட்டை பெற்றுள்ளது. ஏற்கனவே திரைப்படத்தில் குறிப்பிட்ட வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த வசனமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |