இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் முதல் பெண் நடுவராக கிளார்க் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 1-2 என்று கணக்கில் தோற்று போன இந்திய அணி டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனால் டெஸ்ட் தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டீம் பெயின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் 4 வது நடுவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளார்க் பொலர்சன் என்ற பெண் நடுவர் இருக்கிறார். இதன்மூலம் ஆண்களுக்கான ஒரு நாள் தொடரில் முதல் பெண் நடுவராக கிளார்க் இடம்பெற்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.