பாம்பன் பகுதியில் நடுக்கடலில் படகு ஒன்று தீப்பிடித்து எறிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாம்பனில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பி உள்ளது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்க முயன்றுள்ளர் . பின்னர் ஒருவழியாக தீயை அணைத்துள்ளனர். இந்த படகானது பாம்பன் பகுதியிலுள்ள இஸ்ரேல் என்பவருக்கு சொந்தமானதாகும்.
அதிகாலை 6 மணி அளவில் கடல்பகுதியில் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்பதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது விசைப்படகு தீப்பிடித்து இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் மீன்பிடி உபகரணங்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக கூறப்படுகின்றது.