மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அல்லது 100 நாள் வேலை திட்டம் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு வருடத்திற்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்தில் ஒரு நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு சிறப்பு திறன் இல்லாத, உடலுழைப்பு சார்ந்த வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு உதவியாக மத்திய அரசு ரூபாய் 70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார செலவில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது. அரசு தரப்பு அறிக்கையின் படி, சென்ற டிசம்பர் மாதத்தில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 25.1 கோடி பேர் வேலை செய்து வந்தனர். இதையடுத்து 2019 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 22.2 கோடியாக மட்டுமே இருந்தது.
பொதுவாக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்தில்தான் அதிக வேலை இருக்கும். அப்போது தான் விவசாயம் செய்து அறுவடை நடக்கும் காலம் என்பதால் இந்த காலகட்டத்தில் அதிகமாக மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதையடுத்து நவம்பர் மாதத்தில் இருந்து குறைவாக ஆட்கள் வேலை செய்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவு வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் 26.2 கோடி வேலையாட்கள் உருவாக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 22.2 கோடியாக ஆக குறைந்தது. இது 2019 நவம்பர் மாத அளவை விட 5.2 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.