Categories
லைப் ஸ்டைல்

காலைல வெறும் வயிற்றில்…. இதோட இந்த பொருளை சேர்த்து குடிங்க…. அப்புறம் தெரியும்…!!

நெல்லிக்காய் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க பல வகையான உணவுகள் பயன்படுகிறது. ஆனாலும் பலரும் அதை முறையாக பயன்படுத்தாமல் உடல் எடையை குறைக்க முடியவில்லையே என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து உடல் எடையை இயற்கையான முறையில் குறைப்பதற்காக இயற்கையான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றில் சீரகம் கலந்து குடிப்பது ஆரோக்கியமாக, உங்கள் நாளை தொடங்க சிறந்த வழியாகும். நெல்லிக்காய் ஒரு குளிர்கால சூப்பர் ஃபுட் விட்டமின் சி நிறைந்த, குளிர் காலங்களில் மட்டுமே அறுவடை செய்யப்படும் பழம் ஆகும்.

ஜீரா அல்லது சீரகம் என்பது உணவு வகைகளை தயாரிக்கப்படும் ஒரு பொதுவான மசாலா பொருளாகும். இது உணவுக்கு சுவையை தருவதை தவிரவும், சில ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் சீரகத்தை 14 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

நெல்லிக்காயின் சத்துக்கள்:

பல வழிகளில் உணவில் சேர்க்கப்படும் இந்த பழத்தில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது.

இதில் விட்டமின்களான சி, பி6, பி5, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பயன்கள்:

1.நெல்லிக்காயில் உள்ள ஊட்டச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றன.

2.உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

3.புதிய செல்கள் மற்றும் எலும்புகள் உருவாக உதவுகிறது.

4.உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது.

உடல் எடை குறைய:

எடை இழப்புக்கு நீங்கள் இரண்டு வழிகளில் நெல்லிக்காய் அல்லது சீரகத்தை சாப்பிடலாம்.

ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரே இரவில் ஊற வைக்கவும். அதன்பின்னர் காலையில் சீரகத்தை எடுத்துவிட்டு அந்த நீரில் நெல்லிக்காய் சாற்றை சேர்த்து குடிக்கவும்.

அடுத்தது இப்படியும் செய்யலாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நெல்லிக்காய் சாறுடன், சிறிது வறுத்த சீரகப் பொடியை சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த கலவையை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |