Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. தென் தமிழகத்தில் மழை பெய்யலாம்…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அண்மையில் நல்ல மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து மழை பெய்யவில்லை. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தென் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் ஜனவரி-23 மற்றும் 25 வரை லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |