Categories
உலக செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்…. 2 லட்சம் உயிர் பலிகள் ஏற்படும்…. அதிர்ச்சி தகவல்…!!

அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

அமெரிக்காவில் தற்போது கொரோனாவினால் 1.63 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து உள்ளது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிப்பதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து நிர்வகிக்கும் அறக்கட்டளை 732 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

தற்போதைய நிலை குறித்து பேசிய பில்கேட்ஸ் “கொரோனா பாதிப்பை அமெரிக்கா சிறந்த முறையில் எதிர்கொள்ளும் என்று நான் நினைத்தேன். இருப்பினும் அடுத்து ஆறு மாதங்களுக்கு பாதிப்பு மிக மோசமாகத்தான் இருக்கும். சுகாதார அளவிடுதல் மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் கணக்கின்படி அமெரிக்காவில் கூடுதலாக 2 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அதிக உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

கடந்த 2015 ஆம் வருடம் இதே போன்று தொற்று வரும் என்று நினைத்தேன். ஆனால் அதைவிட மோசமாக பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் மோசமாக பாதித்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். மேலும் பைடன் நிர்வாகம் கொரோனாவுக்கு எதிரான திட்டங்களை வகுத்துள்ளது. எனவே இந்த பிரச்சினையை நாம் நேர்மறையான முறையில் கடப்போம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |