பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக 220 ஜோடி மணமக்கள் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரசால் இதுவரையில் 2,345 பேர் மரணடைந்துள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் (20.02.20) திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பயந்து அங்கிருந்த அனைத்து திருமண ஜோடிகளும் முகமூடி அணிந்திருந்தனர். முகமூடி அணிந்து கொண்டு முத்தம் கொடுத்தபடி தங்களது அன்பை பரிமாறி கொண்டனர்.