Categories
அரசியல் மாநில செய்திகள்

அடித்த மழையில், தண்ணீரும் நிற்கலை… எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக….  ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்….  முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல…

மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது என்று அந்த உழைப்பை செலுத்திய நமது உடன்பிறப்புகள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என்று சொன்னார்கள். அது அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கின்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், பலமுறை அமைச்சர் பொறுப்பு, 43 ஆண்டு காலம் பொதுச்செயலாளர் என்ற அசைக்க முடியாத ஒரு பொறுப்பு. இப்படி 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இனமான பேராசிரியர் வாழ்ந்த மாவட்டம் இந்த கிழக்கு மாவட்டம்.

இந்த மாவட்டத்திற்கான சிறப்பு வேறு என்ன சொல்ல முடியும் ? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தொகுதி இருக்கின்ற மாவட்டம் என்கின்ற பெருமை. முன்னாள் முதலமைச்சர்,  நமக்கு எந்நாளும் முதலமைச்சராக இருக்கின்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை…  துறைமுகம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டம். இப்படி தொடர்ந்து பல சிறப்புகளை கொண்டிருக்கின்ற இந்த கிழக்கு மாவட்டத்திலே உரையாற்றுவது என்பது எங்களுக்கான ஒரு பெருமையாக நான் அதை கருதுகின்றேன். ஆக இதை தொடர்ந்து நாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,  இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என பெருமை கொண்டார்.

Categories

Tech |