செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று மக்கள் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்கள், இன்றைக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அதை மேம்படுத்துவதற்கு எந்த திட்டமும் தொழில்நுட்பமும் இருக்கா ? பருவமழை வரப் போகிறது என்கிறார்கள்? அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் படவில்லை, ஒரு சொட்டு மழையில்லாமலா சிதம்பரம், அதே போல கடலூர் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, காவிரியில் நீர் வந்து அவ்வளவு வரத்து வருகிறது என்றால் அதை ஏன் சேமிக்கவில்லை.
அண்ணன் எடப்பாடியார் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு எவ்வளவு குளங்கள், ஆறுகள் எல்லாத்தையும் தூர்வாரினார்கள். அதை முறையாக செப்பனிடனும், அதை செப்பனிடாமல் மழை தண்ணீர் இன்றைக்கு கடலில் கலந்து இன்றைக்கு வீணாகின்ற ஒரு நிலைமை தான் இந்த விடியா தி.மு.க ஆட்சியில் நடந்தது கொண்டு இருக்கின்றது. மழை நீரை சேமிக்கவில்லை, வெள்ளம் ஒரு பக்கம், சென்னைக்கு வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அது மாதிரி 2006 11-ல் எல்லாருக்கும் தெரியும்.
செம்மொழி மாநாடு. அந்த மாநாட்டில் என்ன ஆச்சு ? அவர்கள் குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்தியது, செம்மொழி மாநாட்டில் குடும்ப ஆதிக்கம் தான் எல்லாம். அதேபோல ஒலிம்பியாட் போட்டியில் முழுக்க முழுக்க குடும்ப ஆதிக்கம். தான் வேற யாரும் கிடையாது, சுற்றி முற்றி பார்த்தால் பெரிய அளவுக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி போல அவர்கள் குடும்பம் தான் அமர்ந்திருக்கிறது,
உதயநிதியினுடைய புகழ் பாடுகின்ற அமைச்சர்கள் தான் இருக்கிறார்கள், கல்வித்துறை அமைச்சர் எந்த வேலையும் கல்வித்துறைக்கு பார்க்கவில்லை, மாணவர்களுடைய மர்ம மரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இன்று பள்ளி கல்வித்துறை சீரழிந்துள்ளது. அதை கவனிப்பதற்கு நேரம் இல்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக அன்பில் மகேஷ் இருந்து கொண்டு, இன்றைக்கு அந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர்கள் அனைவரும் இன்றைக்கு உதயநிதியின் உடைய புகழ்பாடுகின்ற வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எந்த வேலையும் செய்யவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முழுக்க, முழுக்க பொய்யையே மூலதனம் ஆக்கி பொய்யிலே ஆட்சி செய்து விளம்பரத்தின் மூலமாக ஆட்சி செய்கின்ற விடியாத அரசாங்கம் தான்.