Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்த துக்கத்தில்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!

பிறந்த 54 நாட்களில் குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ள கூளூரில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த 54 நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நளினி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த மாதம் நளினி திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிலையில் வீட்டில் இருந்த உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து சம்பவத்தன்று இரவு நளினி வீட்டின் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |