Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடி… 2,45,193 பேர் பாதிப்பு… 6,088 பேர் மரணம்… கதிகலங்கி நிற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில், வல்லரசு நாடான அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 2,45,193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 6,088 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பார்த்தால் இத்தாலி கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. இத்தாலியில்  115,242 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை  13,915 ஆக (முதலிடம்) அதிகரித்துள்ளது. அதேபோல ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.  ஸ்பெயினில் 112,065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10,348 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |