Categories
உலக செய்திகள்

அமெரிக்க நிர்வாகத்தில்…. 20 இந்தியர்களுக்கு பொறுப்பு வழங்கி…. அசத்திய பைடன்…!!

அமெரிக்க நிர்வாகத்தில் 20 இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி ஜோபைடன் கௌரவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இருப்பினும் பைடனின் வெற்றியை ட்ரம்ப் ஏற்க மறுத்து வந்தார். இதையடுத்து அமெரிக்க நிர்வாகத்தில் இந்தியர்களை அமர்த்தப் போவதாக பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் அமைய உள்ள பிடன் அரசு ஆரம்பத்திலேயே பல்வேறு சாதனை படைக்க காத்திருக்கிறது.

அதில் முக்கியமாக இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்பும் பிடன் தனது நிர்வாகத்தில் மொத்தம் 20 இந்திய வம்சாவளிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி கவுரவித்துள்ளார். அதோடு வெள்ளை மாளிகையில் 17 முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |