பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இவர், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது அதன்பிறகு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ள இவர் தற்போது நான் தனித்து இருப்பதாகவும், மற்றவருடன் கலந்து பேசவில்லை என்றும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அரசை நடத்த போவதாகவும் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரசுக்கு எதிராக அரசு போராட்டம் நடத்தும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.
Over the last 24 hours I have developed mild symptoms and tested positive for coronavirus.
I am now self-isolating, but I will continue to lead the government’s response via video-conference as we fight this virus.
Together we will beat this. #StayHomeSaveLives pic.twitter.com/9Te6aFP0Ri
— Boris Johnson (@BorisJohnson) March 27, 2020