Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தேர்தலில் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு…4 பேர் பலி… நடந்தது என்ன….?

மேற்கு வங்காள மாநிலத்தில் சிடால்குச்சி பகுதியில் வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவர கும்பல் வெடி குண்டு வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காள மாநிலத்தில் முன்னதாகவே 3-கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. தேர்தலையொட்டி இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்துறை பாதுகாப்பு படைவீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தன. பலத்த பாதுகாப்பு படை வீரர்களையும் மீறி அங்கு பெரிய வன்முறை உருவானது.

பூஜிபெகர் மாவட்டம், சிடால்குச்சி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா. ஜனதா தொண்டர்களும் வாக்குச்சாவடியில் மோதி கொண்டுள்ளனர். வாக்குச்சாவடிக்கு வெளியே இரு கட்சியின் தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அதன்பின் ஓட்டுச்சாவடிக்கு வெளியே வெடிகுண்டுகள் வீசப்பட்டு அப்பகுதி போர்க்களம் போன்று காட்சி அளித்தது. உடனடியாக மத்திய ரிசர்வ் பிரிவு காவல்துறை பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்கள்.

காவல்துறையினர் தடியடி நடத்திய பின்னரும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. பாதுகாப்பு படை வீரர்களை அந்த கிராம மக்கள் மொத்தமாக திரண்டு வந்து தாக்கத் தொடங்கினார்கள். அதன்பின் காவல்துறையின் துப்பாக்கிகளை கலவர கும்பல் பறிக்கவும் முயற்சி செய்தனர். ஆத்திரமடைந்த மத்திய பாதுகாப்பு படையினர் கலவரக் கும்பலை துப்பாக்கியால் சுட்டனர்.

அதன்பின் சி. ஐ. எஸ். எப். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஷுகிளி   மாவட்டம் சன்சுருவா பகுதியில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான லாக்கெட் சாட்டர்ஜி காரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இவரது கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் செங்கல்களை வீசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அவருக்கு பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டது.

பூஷிபெர் மாவட்டம் திம்கடா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் உதய ஜனதா தொண்டர்கள் தாக்கி உள்ளனர் என்ற புகாரின் பேரில் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். அதன்பின் பெகலா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், பா.ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |