முன்னாள் அதிபர் ட்ரம்ப் பைடனுக்கு கனிவான கடிதம் ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டு சென்றுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர்ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இந்நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு பைடனை வரவேற்கவில்லை. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக 150 வருடங்களாக வழக்கத்தில் இருந்த நடைமுறையே ட்ரம்ப் மீறி விட்டார். ஆனால் ட்ரம்ப் ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகையில் கடிதம் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார்.
அந்த கடிதம் மிகவும் ககனிவானதாக இருந்ததாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் ட்ரம்ப் தன்னுடன் பேசிய பிறகு அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என்பதைப் பற்றி பொது வெளியில் பேசுவதாக பைடன் தெரிவித்துள்ளார். கடைசி வரை தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது அதிர்ஷ்டம் பைடன் அரசுக்கு துணை நிற்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.