தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஓரளவுக்கு நல்ல மழையை கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகமாகவும், தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் அதிகமாகவும் பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு இயல்பான மழை அளவை விட 4 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம், மேலும் நீலகிரி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேககூட்டங்களில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.