பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க முடியாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமீபத்தில் வங்கி மோசடிகள் அதிகரித்துவரும் காரணத்தினால் பணம் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி எடுத்துள்ளது. இதனால் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஏடிஎம் அட்டைகளை தூண்டு மூலம் படிக்கும் இயந்திரங்களில் இனி பணத்தை எடுக்க முடியாது என்று அறிவித்துள்ளது.
இயந்திரங்கள் அட்டைகளை உள்ளிழுத்து சில நிமிடங்களில் அதை பிடித்து வைத்திருக்கும் இந்த இயந்திரங்களில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இதுபோன்ற சிக்கலை சமாளிக்க டிஜிட்டல் முறையை பரிந்துரைக்கிறது. PNBOne பயன்பாட்டின் மூலம் பயனர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.