தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தல அஜித்குமார் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்திற்காக தல ரசிகர்கள் பலர் வெகு நாட்களாக காத்திருந்த நிலையில் 2020 இரண்டாம் வருடம் பொங்கலை முன்னிட்டு வலிமை திரைப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. வலிமை திரைப்படத்துடன் பொங்கல் அன்று விஜய் நடிக்கும் பீஸ்ட், விஷால் நடிக்கும் வீரமே வாகை சூடும், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு என ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் இந்த பட்டியலுடன் தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு இத்தனை திரைப்படங்கள் போட்டியிடும் நிலையில் எது வெற்றி பெறும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.