உத்திரபிரதேசத்தில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்துக் கிடங்கு வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் மீரட் நகரில் இருக்கும் பூல்பாக் பகுதியில் ஓம் பிரகாஷ் சர்மா என்பவர் வசித்து வருகின்றார். அந்தப் பகுதியில் அவருக்குச் சொந்தமான மிகப் பழமையான ஒரு கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைத்திருந்தார். அந்த மருந்து கிடங்கில் அதிகாலை 4-மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அக்கட்டடம் வெடித்து சிதறியது. சம்பவத்தின்போது ராஜீவ் குமார் சர்மா அங்கு இருந்துள்ளார். அந்த வெடி விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்து வந்த காவல்துறை மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. அதன்பின் கியாஸ் சிலிண்டர் வெடிப்பதற்கான ஆதாரமும் எதுவும் கிடைக்கவில்லை என்று தடவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் பூல்பாக் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.