Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் ஜனவரி 1 முதல் பாஸ்டாக் கட்டாயம்… “பாஸ்டாக் ரீசார்ஜ் செய்வது எப்படி”..?

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்ட்ராக் பணப்பையை ரீசார்ஜ் செய்வது எப்படி?
பாஸ்டர் கை இரண்டு வழிகளில் பெறலாம். ஒன்று பேடிஎம் மற்றும் இரண்டாவது வங்கிகள் மூலம் பயன்படுத்த முடியும். வங்கிகளைப் பொறுத்த வரை கட்டணம் நேரடியாக கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

பேடிஎம் போன்ற மொபைல் கட்டண முறைகளை பொருத்தவரை பயனர்கள் தங்கள் பயணத்திற்கு முன்பாக தங்கள் பணப்பையை தேவையான அளவு ரீச்சர் செய்திருக்கவேண்டும்.

இதனை யுபிஐ, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு நெட்பேங்கிங் போன்றவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்யமுடியும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎஃப்சி உள்ளிட்ட பல வங்கிகள் பாஸ்ட்ராக்கை வழங்குகின்றன.

பேடிஎம் மற்றும் ஏர்டெல் பேமென்ட் போன்ற சேவைகளை பயன்படுத்தி சில முக்கிய மற்றும் வசதியான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பாஸ்ட் ட்ராக் மூலம் டோல்கேட்களில் வரிசைகளை கட்டுப்படுத்துவதோடு மனித தொடர்புக்கான தேவைகளையும் நீக்குகின்றது.

Categories

Tech |