வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி அங்குள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வியட்நாமில் உள்ள ஹனோய் நகரில் உணவகம் ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. அந்த உணவகத்தில் தங்க மூலாம் பூசப்பட்ட இறைச்சியை ஊழியர்கள் அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து சமைக்கின்றனர். அதனை அந்த உணவகத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் படம் பிடித்து செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்து பேசிய உணவகத்தின் உரிமையாளர் என்குயன் ஹு டங், வியட்னாம் அமைச்சர் டோ லாம் லண்டனில் அண்மையில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை சாப்பிட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது.
அதனை தொடர்ந்து தங்களுடைய சொந்த நாட்டிலும் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை உணவகத்தில் விற்பனை செய்து வருவதாக ஹு டங் கூறியுள்ளார். மேலும் அந்த இறைச்சியின் விலை இந்திய மதிப்பில் ரூ. 3,300 ஆகும். இருப்பினும் வாடிக்கையாளர்கள் விலை மட்டுமல்ல அந்த இறைச்சியின் சுவையும் அருமையாக இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.