நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் , திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே விக்கிரவாண்டி தொகுதி கல்யாணம் பூண்டியில் தேமுதிக – பாமக கட்சி நிர்வாகிகள் இடையே பூத் பணத்தை பங்கிடுவதில் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அதிமுக கடும் அதிருப்தியடைந்துள்ளது.