இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சனையை தீர்க்க “ஹர் கர் ஜல்” திட்டம் மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார் .குடிநீர் பிரச்னையை தீர்ப்பதே மத்திய அரசின் பிராதன நோக்கம், 2020க்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க “ஹர் கர் ஜல்” திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் 95% நகரங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நகரமாக பிரதமரின் ஸ்வாட்ச் பாரத் திட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது,2019 அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனைத்து நகரங்களும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாக மாற்றப்படும்.புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.உலகின் மிகச் சிறந்த கல்வி முறையாக நமது புதிய கல்விக்கொள்கை இருக்கும்.80 ஆயிரத்து 250 கோடி செலவில் 1.25 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ்அமைக்கப்படவுள்ளன.