ராகுல் காந்தி தனது தொகுதியான வய நாட்டிற்க்கு சுற்று பயணம் மேற்கொண்ட போது ஒரு தொண்டர் அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த பாராளுமன்ற தொகுதியான கேரளாவில் உள்ள வயநாட்டிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வயநாடு பகுதியில் காரில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். ராகுல் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். கார் மெதுவாக சென்றபோது தொண்டர்களாக வந்து வந்து ராகுலிடம் கை கொடுத்து விட்டு சென்றனர்.
அதில் ஒரு தொண்டர் ஒருவர் திடீரென கை கொடுத்து விட்டு ராகுல் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால் சாதாரணமாக இயல்புநிலையாகவே ராகுல் சிரித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அடுத்து வந்தவர்களுக்கு கைகுலுக்கினார் ராகுல் காந்தி ராகுல் காந்திக்கு தொண்டர் முத்தமிட்ட இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் ஆகிவருகிறது.
#WATCH A man kisses Congress MP Rahul Gandhi during his visit to Wayanad in Kerala. pic.twitter.com/9WQxWQrjV8
— ANI (@ANI) August 28, 2019