மேற்கு வங்க மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் பரவி வரும் தொற்று காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து பல மாநிலங்களும் தங்களது மாநிலத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெற்றோர்களிடமும், கல்வியாளர்கள் இடமும் கருத்து கேட்டார். அப்போது 83% பேர் நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ள காரணத்தினால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.