நம் பூமியில் ஒரு மாதம் மின்சாரம் இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா…? உலகத்தில் உள்ள எந்த பகுதியையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படும். கடந்த 2019-ஆம் ஆண்டு வெனிசுலாவில் ஒருவாரம் மின்சாரம் இல்லாமல் போனது. அந்த நேரத்தில் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமல் பல பேர் இறந்தனர். அதிக இடங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது. மேலும் மின்சாரம் இருந்தால் மட்டுமே மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மின்சாரம் இல்லையென்றால் இதுபோன்ற சாதனங்களை பயன்படுத்த முடியாது.
இதனால் வான்வெளி, கடல்வழி போன்ற போக்குவரத்து தடைபடும். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய இயலாது. வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களுக்கும் செல்ல முடியாமல் மக்கள் பணம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவர். உலகத்தில் இருக்கும் போக்குவரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு பொருட்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். இதனால் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுவர். வெறும் 7 நாட்கள் வெனிசுலாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கு நிலைமை முற்றிலும் மாறியது. அப்படி என்றால் ஒரு மாதம் உலகத்தில் மின்சாரம் இல்லாமல் போனால் நிலைமை மொத்தமாக மாறி பெரும் ஆபத்தை விளைவிக்கும்.