Categories
உலக செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை…. இந்திய நீதிபதி ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிப்பு…!!!

சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி ரஷ்ய நாட்டை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 22-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடங்கள், வீடுகள், மருத்துவமனைகள் என்று அனைத்து பகுதிகளிலும் ரஷ்ய படைகள் வேட்டையாடி வருகின்றன.

இதனிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா எங்கள் நாட்டில் இனப்படுகொலை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் அரசு சார்பாக முறையிட்டார்.

இது குறித்து, நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் டல்வீர் பண்டாரி என்ற இந்திய நீதிபதி ரஷ்யாவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்.

அவரின் இந்த வாக்களிப்பு, உக்ரைன் பிரச்சினையில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கும் தகவலுக்கு முரண்பாடாக இருக்கிறது. அதாவது, இதற்கு முன்பு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவை எதிர்த்து நடந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விசாரணைக்குப்பின், உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போரை ரஷ்யா உடனடியாக நிறுத்தவேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

Categories

Tech |