ஸ்ரீவைகுண்டம் பகுதி அருகே பனைமரத்தில் இருந்து வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாரமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் முன்னீர்பள்ளம் அடுத்த கொத்தன் குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வெயிலின் தாகத்தைத் தணிப்பதற்காக நுங்கை வெட்ட பனை மரத்தில் ஏறியுள்ளார்.
திடீரென்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பனைமரத்தின் உச்சியில் இருந்து செல்வம் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.