கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் மாணவிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டாள் சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளை கேலி செய்து வந்துள்ளனர்
இதனை கண்ட ஆண்டாள் இருவரையும் கண்டிக்கும் விதமாக திட்டியுள்ளார் இதனால் கோபம் அடைந்த இருவரும் ஆண்டாளை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது வீட்டினையும் சேதப்படுத்தியுள்ளனர் இதனையடுத்து நெய்வேலி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் விமல் ராஜ் மற்றும் வெங்கடேசனை நெய்வேலி பகுதி காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்