பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஐ.நா.வுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஐ.நா. பொதுச் சபையின் 76- ஆவது கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூறியதாவது “அந்நாட்டு அமைப்பைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்படுகின்றது. பருவநிலை மாற்ற பிரச்சனை விவகாரத்தில் ஐ.நா. மீது விமர்சனங்கள் எழுந்தது. கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளவில்லை என்று உலக சுகாதார அமைப்பு மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் சில நாடுகளுக்கு இடையே நடைபெறும் மறைமுகப் போர்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் போன்றவை அந்தக் கேள்விகளின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்தது.
சரியான நேரத்தில் செயல் நடைபெறாமல் இருந்தால் அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என்று இந்திய தத்துவஞானி சாணக்யா தெரிவித்துள்ளார். ஆகவே தற்கால சூழலுக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று ஐ.நா அமைக்க விரும்பினால் அது இன்னும் சிறப்பானதாக செயல்பட்டு நம்பகத்தன்மை அதிகரிக்க வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று குறித்து சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக அந்நாடு புகார் தெரிவித்தது.
சீனாவின் செயல்களை உலக சுகாதார அமைப்பு மூடி மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதைதவிர வர்த்தக தரவரிசையில் சீனாவின் பெயரை இடம்பெறச் செய்வதற்கு உலக வங்கியின் உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததும் கடந்த 2017-இல் வெளிச்சத்திற்கு வந்தது. இதெல்லாம் பல வருடங்களாக காப்பாற்றி வந்த நம்பகத்தன்மையை ஐ.நா இழந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆகவே சர்வதேச சட்டங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பாதுகாக்க ஐ.நா. அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்” என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.