உலகில் வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியா 115 கோடி நிதியை வழங்கியுள்ளது.
இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் ஐநா சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான காசோலையை நியூயார்க்கில் ஐநா சபையின் தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் டாலர்கள் மொத்த நிதிக்கு சார்ந்தது. இது அனைத்து வளரும் நாடுகளின் கூட்டமைப்புக்கும் தகுதி உடையது. மீதமுள்ள 9.46 மில்லியன் டாலர்கள் காமன்வெல்த் நாடுகளுக்கு உரிமையானவை.
இதுகுறித்து ஜார்ஜ் செடீக் கூறுகையில், இந்தியா-ஐநா நிதி அதன் ஆரம்பகால ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்திருக்கிறது. இந்த நிதியை தொடர்ந்து வளர்ப்பதற்கான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட அற்பணிப்பு அந்நாட்டின் பயனுள்ள திட்டங்களின் தொகுப்பை எடுத்து காட்டுகிறது. அதே சமயத்தில் அதன் ஒற்றுமையானது உண்மையான தென்-தெற்கு ஒற்றுமை மற்றும் உலகின் மிகவும் பாதிக்கப் படக்கூடிய சவால்கள் அனைத்தையும் எதிர்ப்பதில் இந்தியத் தலைமையின் நிர்வாகத் திறனை நிரூபிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஐநா வெளியிட்ட அறிக்கையில், தென் நாடுகளிடையே ஒற்றுமைக்கான அழைப்பு மற்றும் கொரோனா பின்னணியில் ஒரு பெரிய எதிரொலியை கண்டறிந்து இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கின்ற வளர்ந்துவரும் நாடுகள், பொது சுகாதாரம், வறுமை குறைப்பு மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றில் அவர்கள் செய்திருக்கின்ற சாதனைகள் அனைத்தும் ஏற்பட்டுள்ள பின்னடைவை தடுப்பதற்கு போராடுகின்றன. இந்நிலையில் பரஸ்பர ஆதரவு, ஒத்துழைப்பின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. எப்பொழுதும் இந்த பின்னணியில் இந்தியா தன்னை போன்று வளரும் நாடுகளை அவர்களது தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளில் ஆதரிக்கும் தனது உறுதியை புதுப்பித்துள்ளது.