Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சித்தியுடன் தகாத உறவு” பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் தனது சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் விஜி(36). இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்முகபுரம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கும் தன்னுடைய சித்தப்பா மனைவிக்கும் இடையே திருமண உறவையும் மீறிய பழக்கம் ஏற்பட்டுளது. இதனால் சிலம்பரசன் இல்லாத நேரத்தில் விஜி அவருடைய வீட்டுக்கு சென்று சித்தியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சிலம்பரசனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து விஜியை நோட்டம் பார்த்து வந்த சிலம்பரசன் சம்பவத்தன்று விஜி வீட்டிற்கு போதையில் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் விஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியை வைத்து குத்திய சிலம்பரசன் விஜியின் பிறப்புறுப்பை அறுத்து துண்டித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே விஜி மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விஜியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் விஜி போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எனவே அவருடைய உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிலம்பரசனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |