தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது.
இதையடுத்து தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருந்து கசிந்த மகளிருக்கு மாத ஊக்கத்தொகை என்ற தகவலை தான் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று முதல்வர் விமர்சித்துள்ளார்.