சைபீரிய காட்டுக்குள் 4 வயது குழந்தை ஒன்று ஒரு வாரகாலமாக தனியாக வசித்த சம்பவம் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு Karina Chikitova ( வயது 4 ) என்ற சிறுமி தனது தந்தையைப் பின் தொடர்ந்து கரடிகளும், ஓநாய்களும் வசிக்கும் அடர்ந்த சைபீரியக் காடு ஒன்றுக்குள் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சிறுமியும் அவளுடன் சென்றிந்த Naida என்ற நாயும் வழி தவறி மாற்றுப்பாதையில் சென்றுவிட்டனர். இதையடுத்து Karina சுமார் 2 வாரங்களாக காட்டில் இருந்த பழங்களை சாப்பிட்டு, புல்லில் உறங்கி உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 12 நாட்களுக்கு பிறகு Artyom Borisov என்ற நபர் அந்த காட்டிற்குள் சென்றிருந்த நிலையில் மறைந்த புதருக்குள் இருந்து அந்த குழந்தை தன்னை நோக்கி கை நீட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் பதற்றத்தில் Karina-வை தூக்கிய அந்த நபர் தன்னுடன் வாரி அணைத்து கொண்டார். மேலும் அந்த குழந்தையின் கை, கால்கள் மற்றும் முகம் என உடல் முழுவதும் கொசு கடித்திருந்ததால் சிவந்து போயிருந்தது. அதோடு மட்டுமில்லாமல் அந்த குழந்தை முற்றிலுமாக பயத்தில் இருந்துள்ளாள். இதற்கிடையே Artyom Borisov அந்த குழந்தையை வாரி அணைத்த போது தனக்கு உணவு, தண்ணீர் வேண்டும் என்று karina கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறாள். அதனைக் கண்டு தனது மனம் உடைந்து போனதாக Artyom Borisov கூறியுள்ளார். இருப்பினும் அந்த சிறுமி தன்னுடைய நாய் தான் தன்னை காப்பாற்றியது என்று கூறியிருக்கிறாள். தற்போது 11 வயதாகும் அந்த சிறுமி பாலே நடனம் கற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.