ஜெர்மனியில் நபர் ஒருவர் திடீரென மக்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள Barbarossaplatz என்னும் பகுதியில் முககவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த மக்களை நீள கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதனால் பதறிய பொதுமக்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும் ஒரு சிலர் மட்டும் அந்த நபரிடம் இருந்த கத்தியை பிடுங்குவதற்காக முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் தெருக்கும்பலால் நடந்ததா ? அல்லது வேறு காரணம் எதுவும் உள்ளதா ?என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
https://twitter.com/i/status/1408468404080627720
இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த நபரோ காவல்துறையினரையும் கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் துப்பாக்கியால் அந்த நபரின் காலில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் யார் ? எதற்காக இப்படி செய்தார் ?என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.