ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் படிப்படியாக பெண்களுக்கு தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதோடு, பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது கட்டாயம் நெருங்கிய ஆண் உறவினருடன் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் முகத்தையும், தலையையும் மறைக்கும் ‘ஹிஜாப்’ போன்ற ஆடைகளை அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர். அதேபோல் வாகனங்களில் பாடல்கள் மற்றும் இசையை ஒழிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆப்கான் பெண்கள் தங்களை தலிபான்கள் மேல்மேலும் அடிமை படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் தலிபான் அரசை வன்மையாக கண்டித்து தலைநகர் காபூலில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பெண்கள் மீதான தலிபான்களின் அடக்குமுறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.