Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி, மதத்துக்கு NO… வெறுப்பை தூண்டும்…. நம்மை பிளவுபடுத்தும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்கணும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி, நம்மை பிளவுபடுத்தும் சாதிய – மதவாத சக்திகளுக்கு எப்பவும் நாம் இடமளிக்கக்கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்று உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம்.

நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு , படிப்பு ,  படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உயரிய லட்சங்களை அடைய கனவு காணுங்கள். அந்த கனவை நினைவாக்க உழைக்கணும். அதுல வெற்றி பெற்று,  நீங்க பெருமை அடைவதோடு,  உங்க பெற்றோரையும் பெருமைப்படுத்தணும்.

நான் முதல்வன் என்ற என்னுடைய கனவு திட்டத்துடைய நோக்கமே அதுதான். படிப்பை திசை திருப்பும் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக்கி விடக்கூடாது. உடல் நலனுக்கும், மனநலனுக்கும் கேடான போதை பழக்கங்களுக்கு இளைய சமுதாயம் அடிமையாகக்கூடாதுனு கேட்டுக்குறேன். இளைய சக்தியின் மூலமாகத்தான் இணையற்ற மாநிலத்தை உருவாக்க முடியும்.

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்று வாழக்கூடாது என்றார் புரட்சி கவிஞர் பாரதிதாசன். அப்படியில்லாமல் அனைவரும் தங்களது குடும்பத்தை வளப்படுத்தி, சமூக வளத்துக்கும் பங்களிக்கனும்னு கேட்டுக்குறேன். பொது தொண்டாச்சுவதால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது.

அந்த வகையில் கடந்த ஆண்டைப் போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக,  புது வாழ்வை தருக. அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், நன்றி வணக்கம். என அந்த வீடியோவில் பேசியிருந்தார் இந்த வீடியோவை சென்ட் மாமா உடனே போட சொன்னார் நானும் போட்டுக் கொண்டிருக்கின்றேன்

Categories

Tech |