ப்ளாக் கரன்ட் பழத்தில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் வீட்டிலேயே செய்யக்கூடிய டெசர்ட் ரெசிபிகளில் இதனை சேர்த்து சாப்பிட்டு இதன் சுவைக்கு அடிமையாகி கொள்வீர்கள்.
இனிப்பு எப்படி புடிக்குமோ அதே போல புளிப்பும் சிலருக்கு பிடிவுக்கும். இனிப்புமிக்க சுவையுடைய பழங்களுள் பெர்ரீஸுடன் ப்ளாக் கரன்டும் ஒன்று. ஏராளமான மருத்துவ குணம் கொண்ட இந்த ப்ளாக் கரன்ட்டை பலவகை ரெசர்ட் ரெசிபிகளில் சேர்க்கின்றனர். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் ஏ சத்தும் மிகுதியாக இந்த ப்ளாக் கரன்ட்_டில் இருப்பதால் சருமம், கூந்தல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பலன் கிடைக்கின்றது. இதில் கால்சியம் சத்தும் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகவும், ஆரோக்கியமாக இருக்கின்றது. இதை நாம் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்.
ப்ளாக் கரன்ட் ஷீர் கோர்மா:
இந்த பாரம்பரிய டெசர்ட் ரெசிபி பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறது. சேமியா, பால், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பழங்கள், பேரிச்சை, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி அலாதி ருசியானது. இதை ப்ளாக் கரன்ட் பழங்களை சேர்த்து கொண்டு அலங்கரித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
ப்ளாக் கரன்ட் சட்னி:
புதினா சட்னி, தேங்காய் சட்னி , தக்காளி சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இனிமேல் இந்த ப்ளாக் கரன்ட் பழம் கொண்டு சட்னி செய்து பாருங்கள். இதனை சாண்ட்விச், சிப்ஸ், சாலட் மற்றும் பிரட் டோஸ்ட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் இதன் சுவை மேலும் அருமையாக இருக்கும்.