பாஜக எம்பி விவேக் தாக்கூர் தலைமையில் ஆனா நாடாளுமன்ற நிலை குழு பள்ளி பாட புத்தகங்களில் உள்ளடக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் மாநிலங்களவையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பாடப்புத்தகங்களில் வேதங்கள், கீதை, பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பாட புத்தகங்களில் சேர்ப்பதற்கு என்சிஇஆர்-டிக்கு நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாட புத்தகங்களில் பகவத் கீதை, வேதங்கள், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பேசப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கிய பெண் ஆளுமைகள், அவர்களுடைய பங்களிப்பு போன்றவைகள் சேர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள பள்ளிக்கல்வித்துறையை என்சிஇஆர்டியுடன் ஒருங்கிணைத்து இதை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.