கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் நேற்று திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணபட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணபட்டுள்ளது. இதில் 96 கிராம் தங்கமும் 524 கிராம் வெள்ளியும் 31 லட்சத்து 54 ஆயிரத்து 339 ரூபாய் ரொக்கப் பணமும் வெளிநாட்டு டாலர்களும் இருந்தன.
மேலும் உண்டியல் திறப்பின் போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், நாராயணி, பிரதீபா, கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனை அடுத்து கோவிலின் பணியாளர்கள் மற்றும் சாய் பக்தர்கள் இணைந்து சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.