Categories
டெக்னாலஜி பல்சுவை

“வருமான வரி சான்றிதழ் வேண்டுமா”..? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்லைன் மூலம் வருமான வரி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் காண்போம்.

வருமானச் சான்று என்பது ஆண்டு ஒன்றிற்கு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழ். வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரர் புகைப்படம்

குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு

சம்பள சான்றிதழ் (சமீபத்திய நகல்)

பான் கார்டு

ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள அட்டை

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுளையவேண்டும். இதில் நீங்கள் புதிய பயனர் என்றால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து, உங்களது தரவுகளை பதிவு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளிடுவது மூலம் நீங்கள் உள்நுழையலாம். பின்னர் வருவாய்த்துறை என்பதை தேர்ந்தெடுக்கவும்.

அதில் REV-103 வருமான சான்றிதழ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Proceed என்பதைக் கிளிக் செய்வேண்டும். தொடர்ந்து நீங்கள் CAN ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அந்த ஆப்சனை தேர்வு செய்யும் போது ஒரு படிவம் தோன்றும். அதில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் செய்யவேண்டும்.இதற்கு முன் நீங்கள் OTP ஐ உருவாக்கி சரிபார்க்க வேண்டும்.

பின்னர் உங்களுக்கான CAN எண் கிடைக்கும். உங்களிடம் ஏற்கனவே CAN எண் இருந்தால் நீங்கள் நேரடியாக அதனை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். இதில் CAN எண்ணை உள்ளீடு செய்யும்போது உங்களுக்கு ஒரு விண்ணப்பப்படிவம் கிடைக்கும்.

அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்யத பின்பு சப்மிசட் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை இணைக்கவேண்டும். ஆவணங்களை பதிவேற்றிய பிறகு, ‘பணம் செலுத்துங்கள்’ என்பதைக் கிளிக் செய்க. ஆன்லைன் மூலம் இதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.

பணத்தை செலுத்தி சப்மிட் செய்த பின்பு உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இதன்மூலம், உங்களது படிவத்தின் நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சான்றிதழ் உங்களுக்கு கிடைக்கும். இதே இணையதளத்தில் லாகின் செய்வது மூலம் நீங்கள் உங்களது வருமானச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |