Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சாமிர்த கடையில் பாய்ந்த வருமான வரித்துறை … கவலையில் மூடப்பட்ட கடை ..!!

பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் .

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு  ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Image result for kanthavilas

இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன. இதனால், இன்று   பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வந்து 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதன்காரணமாக , சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்தம் கடைகள் மூடப்பட்டு உள்ளது.

Categories

Tech |