வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. அதன்படி, இனி வரக்கூடிய காலங்களில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேலான நகைகள், ஓவியங்கள், கல்வி கட்டணம், நன்கொடை ஆகியவையும், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான ஹோட்டல் பில்கள், வணிக பயணம் ஆகியவையும் வருமானவரித்துறை கண்காணிப்பின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முறையாக வரி செலுத்தாதவர்களை சுலபமாக கண்டறிந்து உரிய முறையில் விரைவில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.